கடி

"சூரிய நமஸ்காரம்கிற பேர்லே ரொம்ப நேரம் சூரியனைப் பார்க்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா?''
கடி

* "சூரிய நமஸ்காரம்கிற பேர்லே ரொம்ப நேரம் சூரியனைப் பார்க்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா?''
"இப்ப என்ன ஆச்சு?''
"கோவிலிலேயிருந்து நம்ம பையனுக்கு பதிலா வேற ஒரு பையனைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க!''
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சி.

* "பையன் மோசம் போயிட்டேன்....
மோசம் போயிட்டேன்னு கத்தறானே என்னன்னு பாரு''
"அவன் "மோஷன்' போயிட்டானாம்! ''
ஆர்.கே.லிங்கேசன், 
மேல கிருஷ்ணன் புதூர்.

* "'ஏன்டா நீ பாஸ் பண்ணா மொட்டை போடறேன்னு வேண்டிக்கிட்டியே....என்ன ஆச்சு? போடலையா?''
"எங்கப்பா தலையை நீ பார்க்கலையா?''
தீ.அசோகன், 
18/13, நடராஜ தோட்டம், முதல் தெரு, திருவொற்றியூர், சென்னை - 600019.

* "சார்...,சார்....என் நாய் தொலைஞ்சு போச்சு!....கண்டுபிடிச்சு கொடுங்க!''
"ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க!''
"என்னைப் பார்த்தால் வாலாட்டும்!''
மு.சுகாரா, 
1/14, சத்திரம் தெரு, 
தொண்டி - 623409.

* "ஹார்ட் வாட்டர்'' என்றால் என்ன?
"பயங்கர தண்ணி கஷ்டம்னு அர்த்தம் சார்''
வி.ரேவதி, தஞசாவூர்-613007.

* "இன்னைக்கு ஸ்கூல் உண்டாமே!''
"ஆமா மழை நின்று கெடுத்துட்டுது!''
ஏ.நாகராஜன், 
சென்னை.

வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com