அறிஞர்களின் அறிவுரைகளில் காந்தியடிகள்

கல்வி என்பது ஏட்டுப் படிப்பல்ல; நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ள உதவுவதே.
அறிஞர்களின் அறிவுரைகளில் காந்தியடிகள்

* தண்டிப்பதைவிட மன்னிப்பதில்தான் அதிக ஆனந்தம் இருக்கிறது.
* எதை விதைக்கிறமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
* கல்வி என்பது ஏட்டுப் படிப்பல்ல; நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ள உதவுவதே.
* தவறு செய்வதில் பிழையில்லை; ஆனால் தவறு செய்வதை அறிந்து கொண்ட பின்னர், அதைத் திருத்திக்கொள்ளாமலிருப்பது தவறு ஆகும்.
* நேர்த்தியான வீட்டிற்கு இணையான பள்ளியும் இல்லை; உண்மையும் பலமும் மிக்க பெற்றோருக்கு இணையான ஆசிரியரும் இல்லை.
* பொதுச்சேவைக்கு வந்துவிட்டால் எல்லா வேலையையும் செய்ய வேண்டும். செய்கின்ற வேலையில் ஈடுபாடு கொள்ள வேண்டும்.
* சுயகட்டுப்பாடுடையவன் சுதந்திர மனிதன்.
* தீயதைப் பார்க்காதே!
  தீயதைக் கேட்காதே!
  தீயதைப் பேசாதே!
* மனிதனின் உரிமை சாசனத்திற்குப் பதிலாகக் கடமை சாசனம் தயாரியுங்கள்.
* கற்களால் கட்டப்படும் கோயில்களைவிட நரம்பாலும் தசையாலும் கட்டப்பட்டுள்ள மனித உடல்களே உண்மையான கோயில்கள்.
* சமூக சேவை பயனுடையதாக இருக்க வேண்டுமானால் படாடோபமின்றிச் செயல்பட வேண்டும்.
* கடவுளை அறிய உண்மை, அன்பு, அகிம்சை ஆகிய மூன்றும் வழிகளாகும்.
* வலிமை உடலினின்று வருவதில்லை. மன உறுதியிலிருந்துதான் வருகிறது.
தொகுப்பு: 
கோட்டாறு ஆ.கோலப்பன், ஆர்.மகாதேவன், 
திருநெல்வேலி டவுன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com