பொன்மொழிகள்

உனது வாழ்க்கை முடிந்து விடும் என்று அச்சப்படாதே. அது எப்போதுமே தொடங்காமல் இருந்து விடுமோ என்று அச்சப்படு. 
பொன்மொழிகள்

• மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் நீ எளிய வாழ்க்கையைக் கடைப்பிடி. 
- ரூஸோ

• வாழ்க்கை என்றால் அது ஒரு துணிச்சல் மிகுந்த விடா முயற்சி என்பதுதான் பொருள்.
- ஹெலன் கெல்லர்

• நீண்டநாள் வாழ்வதற்கு  நிதானமாக வாழ்தல் அவசியம். 
- சிஸரோ

• இன்பம் வாழ்க்கையின் லட்சியமன்று. குணமே இலட்சியம். 
- பீச்சர்

• வாழ்க்கையை நேசிப்பவர்கள் பொழுதை வீணாக்கக்கூடாது. ஏனெனில் வாழ்க்கையின் மூலப்பொருளே நேரம்தான். 
- பெஞ்சமின் ஃபிராங்ளின்

• உனது வாழ்க்கை முடிந்து விடும் என்று அச்சப்படாதே. அது எப்போதுமே தொடங்காமல் இருந்து விடுமோ என்று அச்சப்படு. 
- கிரேஸ் ஆன்சன்

• வாழ்க்கையை எந்த அளவிற்குப் பாராட்டிக் கொண்டாடுகிறீர்களோ...,அந்த அளவிற்கு கொண்டாட்டங்கள் இருக்கும். 
- ஓபராஃவின் ஃபிரே

• வாழ்க்கை தரக்கூடிய மிகச் சிறந்த பரிசு, செய்யத் தகுந்த செயல்களைக் கடினமான உழைப்பின் மூலம் செய்வதற்கான வாய்ப்புகளைத் தருவதே! 
- தியோடர் ரூஸ்வெல்ட்

• உங்கள் எதிர்காலத்தை உங்கள் எதிர்காலத்திலிருந்து உருவாக்குங்கள். கடந்த காலத்தில் இருந்து அல்ல.
- வெர்னர் எர்ஹார்டு

தொகுப்பு: அ.கருப்பையா, பொன்னமராவதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com