வெற்றியின் ரகசியம்!

ஒரு பந்தயக் குதிரை. எந்தப் பந்தயமானாலும் அந்தக் குதிரைதான் முதலாவதாக வந்தது. எப்போதும் வெற்றி பெறும் அந்தக் குதிரையை விலை கொடுத்து
வெற்றியின் ரகசியம்!

ஒரு பந்தயக் குதிரை. எந்தப் பந்தயமானாலும் அந்தக் குதிரைதான் முதலாவதாக வந்தது. எப்போதும் வெற்றி பெறும் அந்தக் குதிரையை விலை கொடுத்து வாங்கிவிட்டால் சீக்கிரமே பெரும் பணக்காரராக ஆகிவிடலாம் என்று நினைத்தார் ஒரு பெரிய செல்வந்தர்! 
 உடனே குதிரையின் உரிமையாளரிடம் விலை பேசினார். 
 "குதிரைக்கு வேண்டியதை உங்களால் கொடுக்க முடியுமா?'' என்று கேட்டார் குதிரையின் உரிமையாளர்.
 இதைக் கேட்டவுடன் ரோசம் பொத்துக் கொண்டு வந்தது செல்வந்தருக்கு! 
"எது வேண்டுமானாலும்....,எவ்வளவு வேண்டுமானாலும் என்னால் குதிரைக்குத் தர முடியும்!....அதைப் பற்றிக் கவலை வேண்டாம்''என்றார் மிடுக்குடன்.
பேரமும் முடிந்தது. செல்வந்தர் குதிரையை வாங்கிவிட்டார். பெருமையோடு அதை அழைத்துச் சென்று புதிதாகக் கட்டப்பட்ட லாயத்தில் கட்டினார். அதனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். 
 உயர் ரகக் கொள்ளு...,பச்சைப் பசேல் என்று அன்றன்றைக்குப் பறித்த புல் கட்டுகள்! குதிரையின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள 24மணி நேர மருத்துவர்கள்! குதிரைக்கு ராஜ உபசாரம்தான்! இப்படியாக மாதங்கள் மூன்று கழிந்தன. 
 குதிரை பந்தயத்திற்குப் போனது. பாவம்! அது தோற்றுப் பத்தாவது இடத்திற்கு வந்தது! அடுத்தடுத்த போட்டிகளிலும் குதிரை படு தோல்வியடைந்தது. 
 பணக்காரருக்கு மிகுந்த எரிச்சல் ஏற்பட்டது!  குதிரையின் உரிமையாளரிடம் சென்றார். கோபத்துடன் அவரிடம், "குதிரையை நான் நிச்சயம் சரியாகத்தான் பராமரித்தேன்.......எனினும் அது அடுத்தடுத்துத் தோல்வியையே அடைந்து வருகிறது.....இதற்குக் காரணம் என்ன? உன்னிடம் இருக்கும்போது மட்டும் அது எல்லாப் பந்தயத்திலும் வெற்றியே அடைந்து வந்திருக்கிறது...இப்போது மட்டும் ஏன் இப்படித் தோற்கிறது?'' என்று கேட்டார். 
 "என்னைச் சொல்லிக் குற்றமில்லை....நான் சொன்னபடி நீங்கள் குதிரைக்குத் தேவையானதைக் கொடுத்திருக்க மாட்டீர்கள்.''என்றார்.
 குதிரைக்குக் கொடுத்த ஆகாரத்தின் பட்டியலை நீட்டினார் செல்வந்தர். மற்றும் அதற்கு அளித்த மருத்துவ வசதிகளையும் கூறினார் அவர். 
 "எல்லாம் சரி....! குதிரைக்குக் கொடுக்க வேண்டிய பயிற்சியைக் கொடுத்தீர்களா?'' என்று கேட்டார் குதிரையை விற்றவர்! 
 செல்வந்தர் திகைத்தார்! விழித்தார்! தோல்விக்கான பதில் அதில் அடங்கியிருந்தது! மெüனமானார்!
 "ஆம் இடைவிடாத பயிற்சிதான் வெற்றியின் ரகசியம்! பயிற்சி இல்லாத குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது'' என்றார் குதிரையை விற்றவர்!

-எஸ். திருமலை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com