"சாக்ரடீஸ்' பொன்மொழிகள்!

இசையை ரசிக்கத் தெரிந்தவர்கள் வாழ்க்கையையும் ரசிக்கத் தெரிந்தவர்களாகவே இருப்பர். 
"சாக்ரடீஸ்' பொன்மொழிகள்!

• இசையை ரசிக்கத் தெரிந்தவர்கள் வாழ்க்கையையும் ரசிக்கத் தெரிந்தவர்களாகவே இருப்பர். 
• நீங்கள் நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் முதலில் நீங்கள் மற்றவர்களை நேசிக்கத் தொடங்குங்கள்.
• நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள்....உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே
தொடங்குகிறது.
• ஒவ்வொருவரும் தன்னுடைய கடமை எதுவென்று உணர்ந்து அதைச் சிறந்த முறையில் செய்து கொண்டிருந்தால் சமுதாயம் வளர்ச்சி அடையும்.
• குழந்தைகளை மனித நேயம் உடையவர்களாக வளர்க்கும் கடமை பெற்றோருக்கு உண்டு. குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பதன் மூலம் ஒரு நல்ல
சமுதாயத்தை உருவாக்கலாம்!
• யார் தன்னுடைய வேலை அல்லது தொழிலைச் சரியாகச் செய்கின்றாரோ அவர் கடவுளுக்குப் பிரியமானவர்.
• சிறந்த எண்ணம் கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.
• தனக்கு நேரக்கூடிய துன்பத்தை மனதின் சமநிலையோடு பொறுத்துக் கொள்கிறவனே மனிதருள் உயர்ந்தவன்.
• ஒரு செடி, வளர்வதற்கான முழு ஆற்றலுடன் இருக்கும்போது காற்றும் மழையும் கடுமையான வெப்பமும் அதை என்ன செய்து விட முடியும்?  துணிவும்
அறிவும் கொண்ட உள்ளம் எந்த நிலையிலும் கலக்கமோ, குழப்பமோ அடையாது. 
• உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும்!
தொகுப்பு : சஜிபிரபு மாறச்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com