நரியின் தந்திரம்!

அது ஒரு மலையடிவாரம். காட்டுப் பகுதி. அடிவாரத்தில் ஒரு குகை இருந்தது. அது ஒரு நரியின் இருப்பிடம். நரி இரவில் அந்தக் குகையில் தங்கும்
நரியின் தந்திரம்!

முத்துக் கதை
அது ஒரு மலையடிவாரம். காட்டுப் பகுதி. அடிவாரத்தில் ஒரு குகை இருந்தது. அது ஒரு நரியின் இருப்பிடம். நரி இரவில் அந்தக் குகையில் தங்கும். காலையில்
இரை தேடச் செல்லும். மாலையில் குகைக்குத் திரும்பும். ஓய்வெடுக்கும். 
 ஒருநாள்...
காலையில் நரி இரை தேடச் சென்று விட்டது. 
 அப்பொழுது....
ஒரு சிங்கம் அந்தக் குகையின் பக்கம் வந்தது. குகையின் வாசலில் நரியின் காலடிச் சுவடுகளைக் கண்டது. குகையின் உள்ளே எட்டிப் பார்த்தது. குகையில்
ஒன்றும் இல்லை. 
 சிங்கம் மனதிற்குள், "நரி இரை தேடச் சென்று விட்டது. மாலையில் திரும்பி வரும். இங்கே குகைக்குள்ளே ஒளிந்து கொண்டால் நரி வரும்போது "    லபக்'
கென்று பிடித்துத் தின்று விடலாம்''  என்று நினைத்தது. 
மாலை வந்தது. 
நரியாரும் வந்தார். குகையின் முன்னால் சிங்கத்தின் கால் தடத்தைக் கண்டது. அதிர்ச்சி அடைந்தது. 
 சிங்கம் குகையின் உள்ளே இருக்கிறதா...இல்லையா?...என்பதை அறிய ஒரு தந்திரம் செய்தது. "குகையே...குகையே! நான் திரும்பி வரும்போது ஒவ்வொரு
நாளும் என்னை வரவேற்பாயே!....இன்று உனக்கு என்ன ஆயிற்று?'' என்று சத்தமாகக் கேட்டது.
 இதைக் கேட்ட சிங்கம், மனதிற்குள் ..."இந்தக் குகை நரி திரும்பி வரும்போது  வரவேற்பு அளித்துக் குரல் கொடுக்கும் போலிருக்கிறது....நாம் வரவேற்றுக்
குரல் கொடுத்தால் நரி உள்ளே வந்து விடும்... நாமும் அதைப் பிடித்துத் தின்று விடலாம்' என்று எண்ணி, "நரியாரே!..... நான் மறந்தே போய்விட்டேன்!....
மன்னித்துக் கொள்ளும்....உள்ளே வாரும்! வாரும்!'' என்று சத்தமாகக் கூப்பிட்டது. 
 சிங்கம் உள்ளே இருப்பதை அறிந்து கொண்ட நரியார் நாலுகால் பாய்ச்சலில் ஓடி காட்டுக்குள் மறைந்தார்! 
(பஞ்ச தந்திரக் கதையிலிருந்து....)
எம். துரைராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com