முத்திரை பதித்த முன்னோடிகள்! திருமதி .சுதிப்தா சென் குப்தா

முத்திரை பதித்த முன்னோடிகள்! திருமதி .சுதிப்தா சென் குப்தா

நமது உலகில் உள்ள கண்டங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது அண்டார்டிகா கண்டம் ஆகும்.

நமது உலகில் உள்ள கண்டங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது அண்டார்டிகா கண்டம் ஆகும்.
காரணம், இங்கு நிலம் கிடையாது! தண்ணீர் கிடையாது! தாவரங்கள் கிடையாது! ஆம்! இது ஒரு பனி பாலைவனம்!
கேப்டன்.ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவைச் கண்டறிந்த பிறகு தனது நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்! "நாடுகளை தேடும் பயணம் இத்துடன் முடிந்துவிட்டது என கருதுகின்றேன்...ஆனால் மனிதனின் கால் படாத அதிசய பகுதிகள் இன்னும் இருக்கின்றன. இத்தீவிற்குத் தெற்கே பல நூறு கிலோ மீட்டர்கள்தொலைவில் பனிப் பாறைகளின் தொகுப்பு ஒன்றை கண்டேன்! எனக்குப் பின் வரும் தலைமுறை அங்கு நிச்சயம் செல்லும்! அத்துடன் உலகின் எல்லாஇடங்களையும் கண்டறிந்த பெருமை மனிதனுக்கு கிடைக்கும்!'.
அவர் கூறிய படியே பல ஆண்டுகளுக்கு பிறகு "ரோல்ட் அமண்டசன்' (ROALD AMUNDSON) என்பவர் அங்கு முதன் முதலாக கால் பதித்தார்.
அண்டார்டிக்கா கண்டத்திற்கு முதலில் சென்ற இந்திய பெண் ஆராய்ச்சியாளர் என்ற பெருமை உடையவர் திருமதி சுதிப்தா சென் குப்தா ஆவார். இவரதுதந்தை திரு. ஜோதி ரஞ்சன் குப்தா ஒரு புகழ்பெற்ற கனிம இயல் வல்லுனர் ஆவார். வங்காளத்தில் பிறந்த சுதிப்தா ஜாதவ் பூர் பல்கலைக்கழகத்தில் கனிமஇயலில் முனைவர் பட்டம் பெற்றார். GEOLOGICAL SURVEY OF INDIA என்ற நிறுவனத்தில் 1970 முதல்1973 வரை பணபுரிந்தார். 1977ஆம்ஆண்டு ஸ்வீடன் சென்றார். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் கனிம இயல் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தார்.1979ஆம் ஆண்டு இந்தியா வந்த இவர்மீண்டும் GSI நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். 1982ஆம் ஆண்டு ஜாதவ் பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்தார்.
கனிம இயலுக்கு அப்பால் இவர் அதிகம் ஆர்வம் காட்டியது மலையேற்றத்தில். டென் சிங் நார்கே யின் நேரடி பார்வையில் இமாலய மலை ஏற்ற பயிற்சிக்கழகத்தில் பயிற்சி பெற்றார். பல மலையேற்ற குழுவினருடன் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் மலை ஏறியுள்ளார்.
1983ஆம் ஆண்டு இந்தியா மூன்றாவது முறையாக அண்டார்டிகா பயணத்தை தொடங்கியது. கிழக்கு அண்டார்டிகா பகுதியில் உள்ள கனிம வளங்களை பற்றி
ஆராய வல்லுனர் குழு ஒன்று அனுப்பப்பட்டது. அக்குழுவில் சுதிப்தாவும் இடம்பெற்றார். இவருடன் டாக்டர் அதிதி பந்த் என்ற கடல்சார் விலங்கியல்வல்லுனர் ஒருவரும் இடம்பெற்றார். இவர்களிருவரும் இந்தியாவில் இருந்து அன்டார்டிகா சென்ற முதல் இந்திய பெண்மணிகள் என்ற சிறப்பு பெறுகின்றனர்.
அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை இவர் மேற்கொண்டார். இவர் அறிவித்த முடிவுகள் இந்தியாவிற்கு மட்டுமன்றி அங்கு ஆராய்ச்சி செய்யும் பிற நாடுகளுக்கும்உதவிகரமாக இருந்தன. இவர் பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை உலகெங்கிலும் பதிவாகும் கனிம இயல் இதழ்களில் எழுதி உள்ளார். தனது அன்டார்டிகாபயணம் பற்றி வங்காள மொழியில் நூல் ஒன்றை எழுதி உள்ளார். அது பல பதிப்புகள் விற்று தீர்ந்தது. அறிவியல் துறைக்கு இவர் ஆற்றிய அறியசேவைகளுக்காக இந்திய அரசு இவருக்கு "சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது' 1991 ஆம் ஆண்டு வழங்கி கெளரவித்தது.

அறிந்து கொள்வோம் வாருங்கள்!
(1) அண்டார்டிகாவை ஆராய பல்வேறு நாடுகளும் அங்கு ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. அங்கு ஆராய்ச்சி செய்ய விரும்பும் ஒவ்வொரு நாடும்"அண்டார்டிகா உடன்படிக்கை' என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதன்படி1981ஆம் ஆண்டு இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
(2) 1983 ஆம் ஆண்டு "தக்ஷின் கங்கோத்ரி என்ற ஆய்வுக் கூடத்தை ரஷ்யர்கள் உதவியுடன் அமைத்தது. ஆனால் 1988ஆம் ஆண்டு அடித்த கடும்பனிப்பொழிவு காரணமாக அது உருக்குலைந்தது. இதனால் அது கைவிடப்பட்டது. எனவே 1989ஆம் ஆண்டு "மைத்ரி' என்ற மற்றொரு ஆய்வுக்கூடம் நிறுவப்பட்டது. மேலும் அதன் அருகே ஒரு சிறிய ஏரி ஒன்றையும் இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினர். அதன்பெயர் "பிரியதர்ஷினி' என்பது ஆகும்.
(3) 2015 ஆம் ஆண்டு "பாரதி' என்ற மற்றொரு ஆய்வுக்கூடம் நிறுவப்பட்டது. இது மிகுந்த பாதுகாப்பும் நவீன வசதிகளையும் உடையது.
(4) 1960ஆம் ஆண்டு ஆஸ்திரேலியர்களின் குழு ஒன்று அண்டார்டிகாவிற்கு பயணம் மேற்கொண்டது. அதில் லெப்டினன்ட் ராம் சரண் என்ற இந்திய ராணுவ
அதிகாரி ஒருவரும் இடம்பெற்றார். இவரே அண்டார்டிகாவிற்குச் சென்ற முதல் இந்தியர் ஆவார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1961 ஆம் ஆண்டு சாலைவிபத்தில் இவர் காலமானார். எனவே இவர் அண்டார்டிகாவிற்கு பயணம் மேற் கொண்டதைப் பற்றிய புகைப்படங்களோ மற்ற தகவல்களோ கிடைக்கவில்லை.
எனினும் ஆஸ்திரேலியர்களின் பயணக் குழுவில் இவரது புகைப்படமும் தகவல்களும் கிடைக்கின்றன. இதன்மூலம் இவரே அன்டார்டிகாவிற்கு பயணம் செய்தமுதல் இந்தியர் என்று தெரிகிறது.
(5) இதுவரை இந்தியா 33 முறை அண்டார்டிகாவிற்கு இந்திய வல்லுனர்குழுவை அனுப்பி உள்ளது.
தொகுப்பு :
லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com