விடுகதைகள்

நம்மை அவன் தொடுவான், நாம் அவனைத் தொட முடியாது... இவன் யார்?
விடுகதைகள்

1.  ஊதினால் பறக்கும். இதன் மதிப்பை உலகமே மதிக்கும்... 
2.   கள்ளனுக்குக் காவல், காவலுக்குத் தோழன்...
3.   வேகாத வெயிலில் வெள்ளையன் விளைகிறான்... இவன் யார்?
4.   வானத்திலும் வாழ்வான் பூமியிலும் வாழ்வான்... இவன் யார்?
5.   எத்தனை பேர் ஏறினாலும் சலிக்காத குதிரை...
6.  தண்ணீரில் மூழ்கியவன், தரையில் மூச்சை விட்டான்...
7.   கருப்பு பாயில் வெள்ளையன் தூங்குகிறான்... யார் இவன்?
8.   நம்மை அவன் தொடுவான், நாம் அவனைத் தொட முடியாது... இவன் யார்?
9.   ஒரு சாண் மனிதனுக்கு உடல் எல்லாம் பல்...
விடைகள்:
1. ரூபாய் நோட்டு
2. ஜன்னல்
3. உப்பு
4. நீர்
5. திண்ணை
6. மீன்
7. தோசை
8. காற்று
9. சீப்பு
-ரொசிட்டா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com