அங்கிள் ஆன்டெனா

நம்மைப் போல, அந்த ஊரைப் பார்க்க வேண்டும் இந்த ஊருக்கு ஒரு தடவையாவது விசிட் அடிக்க வேண்டும் என்றெல்லாம் பறவைகளுக்கு ஆசையெல்லாம் கிடையாது.
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: 
பல பறவைகள் நாடு விட்டு நாடு பறந்து செல்கின்றன... வேடந்தாங் கலுக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருடம் தோறும் விசிட் செய்கின்றன. இப்படி எத்தனை தூரத்துக்கு அவை பயணம் செய்யும்...?
பதில்: பறவைகள் இடம் விட்டு இடம் பெயர்வதற்கு மைக்ரேஷன் என்று பெயர் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது உலக அதிசயங்களில் ஒன்று என்றே நாம் கருதலாம். 
நம்மைப் போல, அந்த ஊரைப் பார்க்க வேண்டும் இந்த ஊருக்கு ஒரு தடவையாவது விசிட் அடிக்க வேண்டும் என்றெல்லாம் பறவைகளுக்கு ஆசையெல்லாம் கிடையாது.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் உணவுப் பற்றாக் குறை ஏற்படுவதாலும் கால நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதாலும்தான் பறவைகள் இடம் விட்டு இடம் பெயர்கின்றன. தாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான தட்பவெப்ப நிலையும், உணவும் கிடைக்கும் இடத்தைத் தேடித்தான் பறவைகள் இப்படிப் பயணிக்கின்றன.
தலைமுறை தலைமுறையாக இது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்படி வெகுதூரம் பய ணிக்கும்போது களைப்பு ஏற்படுவதால், 6 முதல் 11 மணி நேரத்துக்கு ஒருமுறை ஏதாவது ஒரு இடத்தில் தங்கி ரெஸ்ட் எடுத்துக் கொள்ளும் இந்தப் பறவைகள் கடலுக்கு மேல் பறக் கும்போது மட்டும் ஓய்வில்லாமல் பறக்கின்றன.  இப்படிப் பறக்கும் பறவைகள் சுமார்  4 ஆயிரத்து 800 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கின்றன என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இப்படிப் பறக்கும் பறவைகளில் உள்ளான் குருவிதான் நம்பர் ஒன்.

அடுத்த வாரக் கேள்வி
பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும் கழுதைப் புலி என்றவிலங்கால் ஏதேனும் பயன் உள்ளதா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com