இந்திய  பொன்மொழிகள்!

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.  ஒன்று காலம். இன்னொன்று மெளனம். 
இந்திய  பொன்மொழிகள்!

* எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.  ஒன்று காலம். இன்னொன்று மெளனம். 

• எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள். 

• ஆசையில்லாத முயற்சியினால் பயனில்லை...முயற்சியில்லாத ஆசையினாலும் பயனில்லை. 

• செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒரு போதும் உதவி செய்யாது. 

• சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தை விட,  சண்டையே இல்லாத சமாதானமே மிகச் சிறந்தது. 

• பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச்  சிறப்பாகப் படைக்க முடியாது. 

• அதிகம் பேசாதவனை உலகம் விரும்பும். அளந்து பேசுபவனை மதிக்கும். அதிகம் செயல் படுபவனை துதிக்கும்.

• உலகம் ஒரு விசித்திரமான பள்ளிக்கூடம். இங்கே பாடம் சொல்லிக்கொடுத்து பரீட்சை நடப்பதில்லை. பரீட்சை முடிந்த பின்பே பாடங்கள் கிடைக்கிறது.

• சிக்கனம் என்பது குறைவாகச் செலவு செய்வதல்ல....உபயோகமாகச் செலவு செய்வதுதான்.
சஜிபிரபு மாறச்சன், சரவணந்தேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com