நூல் புதிது

ஆசிரியர் பெயரே அராத்து என்று இருப்பதால் பயப்பட வேண்டாம். ரொம்ப ஜாலியான புத்தகம். ஆழி என்ற குழந்தையின் சேட்டைகளை மூட்டை
நூல் புதிது

• ஆழி டைம்ஸ்
ஆசிரியர்: அராத்து
பக்கம்: 92; விலை: ரூ.130.
ஆசிரியர் பெயரே அராத்து என்று இருப்பதால் பயப்பட வேண்டாம். ரொம்ப ஜாலியான புத்தகம். ஆழி என்ற குழந்தையின் சேட்டைகளை மூட்டை மூட்டையாக அடுக்கியிருப்பது அட்டகாசம். சும்மா ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்-ல டைம்ஸ் வேஸ்ட் பண்றவங்க யாராவது இருந்தா இந்த நூலை ரெகமண்ட் பண்ணுங்க. படிச்சு முடிச்சதும் ஆழியை மிகவும் ரசிப்பாங்க. ரசிச்சு முடிச்சதும் மறுபடி மறுபடி படிப்பாங்க. குழந்தைகள் இலக்கிய உலகிற்கு இது ஒரு புதிய முயற்சி!  (வெளியீடு:  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை- 600 098 ; போன்: 044-26251968).

• பிஞ்சு இதழ் கொஞ்சு மொழி
ஆசிரியர்: கவிஞர் மணமேடு குருநாதன்
பக்கம்: 110; விலை: ரூ.145.
"இளைய தலைமுறையினரின் எழுச்சிக்கு' என்று நூலின் முகப்பில் குறிப்பிட்டிருக்கிறார் நூலாசிரியர். நல்ல முயற்சி. எழுச்சியும் மகிழ்ச்சியும் அளிக்கும் 80 பாடல்களையும் எளிய, இனிய தமிழில் தந்திருக்கிறார். "நான்கும் நான்கும் எட்டு, நகத்தை நன்றாய் வெட்டு' போன்ற இனிய பாடல்கள் நிரம்பிய நூல்.  மாணவமணிகளின் பிறந்தநாளுக்குப் பரிசளிக்க உகந்த நூல்! (வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப் பேட்டை, சென்னை-600014; போன்: 044-28132863).

• கிள்ளை மொழி
ஆசிரியர்: மழலைக்கவி பெ.பெரியார் மன்னன்
பக்கம்: 92; விலை: ரூ.95.
கவிதை நூல்! "கவிதைகளில் தாள கதி இருந்தால் குழந்தைகள் மனதில் எளிதாகப் பதியும்' என்று அணிந்துரையில் இசைக்கவி ரமணன் குறிப்பிட்டுள்ளார்.  அவர் கூறியபடியே இந்நூலில் உள்ள 79 பாடல்களும் தாளம் போட்டு பாடும் வகையில் அமைந்துள்ளது. சின்ன சின்ன சொற்கள், பாட்டுக்கு ஏற்ற படங்கள் எல்லாமே குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்துள்ளது! (வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை- 600 098 ; போன்: 044-26251968)..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com