கடி

""இன்னிக்கிக் காலையிலே தாத்தா என்னை வாக்கிங் ஸ்டிக்காலே தட்டி எழுப்பினார்டா!''""ஓ!....வாக்கிங்க ஸ்டிக்...."வேகிங்'....ஸ்டிக் ஆயிடுச்சா?''
கடி

""இன்னிக்கிக் காலையிலே தாத்தா என்னை வாக்கிங் ஸ்டிக்காலே தட்டி எழுப்பினார்டா!''
""ஓ!....வாக்கிங்க ஸ்டிக்...."வேகிங்'....ஸ்டிக் ஆயிடுச்சா?''

டி.கே.ராதா, சீர்காழி.

""இந்தக் காசு செல்லுமா?''
""இந்த ரூபாய் மட்டும் இல்லே....எந்த ரூபாயும் செல்லாது....வெச்ச இடத்திலேதான் இருக்கும்!''

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். 

" ""நேத்து ஏன்டா ஸ்கூலுக்கு வரலே?...''
""தலைக்கு மேலே வேலைடா''
""அப்படி என்ன வேலை?''
""முடி வெட்டிக்கிட்டேன்!''

தீ.அசோகன், 18/3 நடராஜ தோட்டம், சென்னை - 600019.


""டீச்சர் எதாவது கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
""அப்படீன்னா?''
""திரு...திருன்னு முழிப்பான்!''

இரா.நந்தினி, வந்தவாசி.

""பாலு,....என் கையை முகர்ந்து பார்த்து நான் என்ன சாப்பிட்டேன் சொல்லு!''
""சாக்பீஸ்!''

ஆர்.யோகமித்ரா, சென்னை - 600073.

""என்னை மாதிரியே யாரோ "வெளியூர்'ங்கிற பேரிலே இருக்காங்க போலிருக்கு!''
""....."வெளியூர்'ங்கிற பேரிலேயா?....உன்னை மாதிரியா?... என்னடா சொல்றே?... குழப்பமா இருக்குடா!''
""மதுரைக்குப் பக்கத்திலே ஒரு கிராமத்துக்கு வழி கேட்டப்போ என்னைப் பார்த்து நிறைய பேர், "நீ வெளியூரா?' ன்னு கேட்டாங்கடா!''

நெ.இராமன், "சிவாலயா'.... சென்னை - 600074.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com