விதை வீசம்மா விதை வீசு!

விதை வீசம்மாவிதை வீசு!
விதை வீசம்மா விதை வீசு!

விதை வீசம்மா
 விதை வீசு!
 விருட்சம் வளர
 விதை வீசு!
 
 வெப்ப பூமி
 குளிர்ந்திடவே
 விரும்பி நீயும்
 விதை வீசு!
 
 சாலை ஓரம்
 எங்கெங்கும்
 சோலையாக
 விதை வீசு!
 
 நாளை உனக்கு
 நலம் தருமே
 நம்பி நீயும்
 விதை வீசு!
 
 வளரும் மரங்கள்
 ஒவ்வொன்றும்
 வாழ்வின் வரங்கள்
 விதை வீசு!
 
 வீசும் விதைகள்
 என்றென்றும்
 சூழல் காக்கும்
 விதை வீசு!
 
 காய், கனி மரங்கள்
 செழித்தே வளர
 விதை வீசம்மா
 விதை வீசு!
 
 கோடை வெயிலில்
 நிழல் தரும் தருக்கள்
 விதை வீசம்மா
 விதை வீசு!
 
 கிளைகளிடையே
 கூடுகள் கட்டிக்
 குஞ்சு பொறித்து
 இன்னிசை பாடும்
 
 பறவைகள் ஒலிகள்
 பரவசமாக்கும்
 விதை வீசம்மா
 விதை வீசு!
 
 -வீதி.முத்துக்கணியன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com