விடுகதைகள்

இலையைப் பறித்தான் ஒருவன்... கொதிக்க வைத்தான் ஒருவன்... ஆஹா, என்ன ருசி என்றான் இன்னொருவன்...
விடுகதைகள்

1. வெடித்துச் சிதறியவன் உடுத்த வேண்டியதைத் தருகிறான்...
2. வெய்யிலுக்குக் காய்வான் தண்ணீருக்குப் 
பொங்குவான்...
3. காடு சிறு காடு... அங்கே கூட்டம் பெருங்கூட்டம்...
4. இது ஒரு அழகு தேவதை... ஆடி ஓடும் தேவதை...
5. அன்றாடம் மலரும், அனைவரையும் கவரும்...
6. அண்ணன் தோட்டத்திலே பச்சைப் பாய் விரித்திருக்கு...
7. உரசினால் போதும் உயிர் முடிந்து விடும்...
8. இலையைப் பறித்தான் ஒருவன்... கொதிக்க வைத்தான் ஒருவன்... ஆஹா, என்ன ருசி என்றான் இன்னொருவன்...
9. திறந்தால் சீறிக்கொண்டு வருபவன் தாகமும் தீர்ப்பான்...
விடைகள்:
1. பருத்தி
2. சுண்ணாம்பு
3. தலைமுடி... பேன்கள்...
4. மயில்
5. கோலம்
6. கீரை
7. தீக்குச்சி
8. தேயிலை
9. சோடா கலர்
- ரொசிட்டா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com