நினைவுச் சுடர் ! நம்பிக்கை!

சோஃபி ஜெர்மெயின் என்று அந்தப் பெண்ணுக்குப் பெயர். அவளுக்கு கணக்குப் பாடம் என்றால் அலாதி ஆர்வம்!....ஆனால் அவள் வசிக்கும் பிரான்ஸ் நாட்டில் பெண்களுக்குக் கல்லூரி சென்று
நினைவுச் சுடர் ! நம்பிக்கை!

சோஃபி ஜெர்மெயின் என்று அந்தப் பெண்ணுக்குப் பெயர். அவளுக்கு கணக்குப் பாடம் என்றால் அலாதி ஆர்வம்!....ஆனால் அவள் வசிக்கும் பிரான்ஸ் நாட்டில் பெண்களுக்குக் கல்லூரி சென்று கற்கத் தடை இருந்தது. அவளது சகோதரர்களுக்கு கணிதம் சொல்லித்தர டியூஷன் வாத்தியார் வருவார். மறைந்து இருந்து இதை கவனிப்பாள் சோஃபி! ஆர்வ மிகுதியால் தானாகவே கணிதத்தைக் கற்றுக்கொண்டாள். அப்பா சேமித்து வைத்த புத்தகங்களோடு வீட்டு நூலகம் இருந்தது. அதிலிருந்த கணக்குப் புத்தகங்கள் அவளுக்கு மிக உதவியாக இருந்தது. அவளது பல்கலைக் கழக ஆசை விடவில்லை! பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்தாள்.
 பெண்கள் பல்கலைக் கழகத்தில் படிக்கத் தடை இருந்தது. எனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது!....ஆண்கள் மட்டும் கல்லூரிக்கு வந்தோ,....வீட்டிலிருந்தபடியோ படிக்கலாம்!
 கணிதத்தில் ஆர்வமாக இருந்த சோபியா தலையை ஆண்கள் போல் வெட்டிக் கொண்டாள். வீட்டிலிருந்தபடி படிக்க "ஆண்' பெயரில் மறுபடியும் விண்ணப்பித்தாள்!
 பரீட்சை வந்தது! எழுதினாள்! முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றாள்! வீட்டிலிருந்தே படித்த மாணவன் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றது பல்கலைக் கழகத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த மாணவனுக்கு மெடல் வழங்குவதற்காக கல்லூரிக்கு வரும்படி அழைப்பை அனுப்பினர்!
 ஆண் போலவே உடையணிந்து வந்த சோஃபி பதக்கத்தைப் பெற்றுக்கொண்டாள்! விழா மேடையில் பேச அவளை அழைத்தனர்! மேடை ஏறிய சோஃபி, ""நீங்கள் நினைப்பது போல் நான் ஆண் அல்ல......ஒரு பெண்!...'' என்ற உண்மையை பகிரங்கமாகக் கூறிவிட்டாள்!
 ஆனால் உண்மையைக் கூறியதற்காக யாரும் அவளைப் பாராட்டவில்லை! அவளுக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை பல்கலைக் கழகம் திரும்பப் பெற்றுக் கொண்டது!
 காலம் மாறியது!....எந்த பல்கலைக் கழகத்தில் சோஃபிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதோ,...பதக்கம் மறுக்கப்பட்டதோ அதே பல்கலைக் கழக நுழைவு வாயிலில் இப்போது சோஃபியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது! சோஃபியின் பெயரில் கணித மேதைகளுக்கு பிரான்ஸில் விருது வழங்கப்படுகிறது!
 -க.அருச்சுனன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com