பொன்மொழிகள்!

வழிகாட்டி இல்லாமல் தம்மைத்தாமே வழிகாட்டிகளாகக் கொள்பவர்கள் முன்னேறுவதில்லை. 
பொன்மொழிகள்!

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்! 
- அனடோல் பிரான்ஸிஸ்

* வழிகாட்டி இல்லாமல் தம்மைத்தாமே வழிகாட்டிகளாகக் கொள்பவர்கள் முன்னேறுவதில்லை. 
- ஆலிவர் கோல்ட்ஸ்மித்

* சிரிக்கத் தெரியாதவர்கள் விலங்குகளுக்கு ஒப்பானவர்கள். 
- என்.எஸ்.கிருஷ்ணன்

* காலி வயிறுடன் அலைபவர்களுக்கு மத போதனை உதவாது. 
- ராமகிருஷ்ணர்

* உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்! வாழ்த்துக்குரியவன்! அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது சமுதாயத்தின் 
நல்வாழ்வையே புரையோடச் செய்வதாகும். - அறிஞர் அண்ணா

* கவிதை என்பது குரலுள்ள ஓவியம்! ஓவியம் என்பது மெüனமான கவிதை! 
- சிமோனிடஸ்

* ஆடுகளைப் போன்ற ஒரு ஜன சமுதாயம் ஓநாய்களைப் போன்ற ஆட்சியாளர்களைத்தான் பெறும்! 
- டிஜரவெனல்

* ஒரு புத்திசாலியால் முட்டாள் போல் சில சமயங்களில் இருக்க முடியும். ஆனால் ஒரு முட்டாள் புத்திசாலியைப்போல் எப்போதுமே இருக்கமுடியாது! 
- கர்ட் சோலஸ்கி

* பொறுமை பிரார்த்தனையைவிட உயர்ந்தது! - புத்தர்

* வாழ்க்கையில் ஒழுங்கு வந்துவிட்டதா?....அப்படியானால் கட்டுப்பாடும் வந்துவிட்டது! 
- யாரோ
தொகுப்பு : முக்கிமலை நஞ்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com