திரிகடுகம்

திரிகடுகம்
திரிகடுகம்

நல்லாதனார்
செந்தீ முதல்வ ரறநினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியிற் - சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவு மிம்மூன்றும்
திங்கண் மும்மாரிக்கு வித்து. (பாடல்-98)

சிவந்த முத்தீ வேள்விக்கும் முதன்மையான அந்தணர் தமக்குரிய அறங்களை மறவாது செய்து
வாழ்தலும்; கொடிய கோபத்தை உடைய அரசன், நீதி நெறிக்கண் செல்லுதலும்; ஒரு பெண் கணவனுடைய குறிப்பின் வழியே செல்லுதலும் ஆகிய இந்த மூன்று செயல்களும் மாதந்தோறும் பொழிய வேண்டிய மூன்று (மும்முறை) மழைக்கும் காரணங்களாகும். அந்தணர் அறத்தாலும், அரசன் நீதியாலும், மகளிர் கற்பாலும்
திங்கள் மும்மாரிப் பொழியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com