திரிகடுகம் நல்லாதனார்

நட்புக் குணம் இல்லாதவரிடத்து நட்புரிமை செய்கின்றவனும்; தன் மனைவியைக் காத்தலை  இகழுகின்ற அறிவிலியும்
திரிகடுகம் நல்லாதனார்

நண்பிலார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில்
இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர்
ஒழுக்கங் கடைப்பிடி யாதார். (பாடல்-94)

நட்புக் குணம் இல்லாதவரிடத்து நட்புரிமை செய்கின்றவனும்; தன் மனைவியைக் காத்தலை  இகழுகின்ற அறிவிலியும்; குணமில்லாத குற்றமாகிய சொல்லைச் சொல்பவனும் ஆகிய இந்த மூவரும் தாம் ஒழுகும் திறத்தினை உறுதியாகக் கொள்ளாதவராவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com