மருந்தின் நான்கு தொகுதி

மருந்தின் நான்கு தொகுதி

தெய்வப் புலவர் திருவள்ளுவர் பொருட்பாலில் "மருந்து' என்னும் 57ஆவது அதிகாரத்தில் மருத்துவம் தொடர்பான பல கருத்துகளைக் கூறியுள்ளார்.

தெய்வப் புலவர் திருவள்ளுவர் பொருட்பாலில் "மருந்து' என்னும் 57ஆவது அதிகாரத்தில் மருத்துவம் தொடர்பான பல கருத்துகளைக் கூறியுள்ளார். ஆயுள்(ர்) வேதமுடையார் வாதம், பித்தம், ஐ (கோழை, சிலேஷ்மம்) என்னும் மூன்றின் காரணமாக உடலில் நோய் வரும் என்று கூறுவர்.
"மருத்துவர் நோயாளியின் நோயை அதன் குறிகள் இன்னதென்று அறிந்து, பின் அது வரும் காரணத்தை ஆய்ந்து, பின் மருந்து செய்தல், உதிரம் களைதல் (அறுத்தல், சுடுதல்) பற்றுப்போடுதல் ஆகியவற்றால் அந்நோயை நீக்கும் உபாயத்தை அறிந்து, அதைச் செய்யும் வழிப் பிழையாமல் செய்க' என்று கூறுகிறார் (8). இறுதிக் குறட்பாவில்,

"உற்றவன் தீர்ப்பான் மருந்துதுழைச் செல்வானென்று
அப்பானாற் கூற்றே மருந்து'

இந்நான்கும் சேர்ந்த தொகுதியே மருந்து என்கிறார்.
இக்குறளுக்கு விளக்கம் எழுதும் பரிமேலழகர்,

1. (நோய்) உற்றவன் வகை நான்காவன: பொருளுடைமை, மருத்துவன் வழி நிற்றல், நோய் நிலை உணர்த்தல், மருந்துத் துன்பம் பொறுத்தல் எனவும்;
2. தீர்ப்பான் வகை (மருத்துவர்) நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியரை வழிபட்டு ஓதிய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பல காலம் தீர்த்து வருதல், மனம், மொழிகள் தூயவாதல் என இவை எனவும்,
3. மருந்தின் வகை நான்காவன: பல பிணிகளுக்கும் ஏற்றல், சுவை, வீரியம், விளைவு ஆற்றல்களால் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், உடலோடு பொருந்துதல் எனவும்,
4. (உடன் செல்வான்) இயற்றுவான் வகை நான்காவன: நோயாளியிடம் அன்புடைமை, மனம் மொழி மெய்கள் தூயதாதல், சொல்லியவாறே செய்யும் ஆற்றல், அறிவுடைமை எனவும் கூறுகிறார். "இவையெல்லாம்
கூடிய வழியல்லாது பிணி தீராமையின் நான்கும் சேர்ந்த இத்தொகுதியே மருந்து என்றார்' என எழுதுகிறார். மேலே உள்ள திருக்குறள் கருத்துகள் பலவும் இன்றைய மருத்துவ உலகிலும் பொருந்தி வருவதை அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com