பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தன்னிடத்துள்ளதொரு பொருளை ஒருவர் ஒருவரிடத்துக் காவல் செய்து தருமாறு கொடுத்தால், அவர் வேண்டியபொழுது, தாம் அகப்படுத்திக் கொள்ளாமல் கொடுக்கக் கடவர்.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உள்ளது ஒருவர் ஒருவர்கை வைத்தக்கால் 
கொள்ளும் பொழுதே கொடுக்கதாம் - கொள்ளார்
நிலைப்பொரு ளென்றதனை நீட்டித்தல் வேண்டா
புலைப்பொருள் தங்கா வெளி. (பாடல்-17)

தன்னிடத்துள்ளதொரு பொருளை ஒருவர் ஒருவரிடத்துக் காவல் செய்து தருமாறு கொடுத்தால், அவர் வேண்டியபொழுது, தாம் அகப்படுத்திக் கொள்ளாமல் கொடுக்கக் கடவர். நிலையான பொருள் என்று கருதிக் கொடாது காலம் நீட்டித்தல் வேண்டா; புலால் நாறும் பொருள் எங்ஙனம் மறைப்பினும் மறைபடாது வெளிப்பட்டுவிடும் ஆதலான். (க.து.) அடைக்கலப் பொருளைக் கொள்ளாது வேண்டிய பொழுது கொடுத்து விடுக. "புலைப்பொருள் தங்கா வெளி' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com