பெயர் சுருங்கியது 

தமிழில் சிற்றிலக்கியங்கள் படைத்த கவிஞர்களுள் குமரகுருபர சுவாமிகள் குறிப்பிடத்தக்கவர். "நான் திருவாரூர் என்னும் ஊரை நெருங்கினேன்; என் பெயர் சுருங்கிவிட்டது' என்கிறார்.
பெயர் சுருங்கியது 

தமிழில் சிற்றிலக்கியங்கள் படைத்த கவிஞர்களுள் குமரகுருபர 
சுவாமிகள் குறிப்பிடத்தக்கவர். "நான் திருவாரூர் 
என்னும் ஊரை நெருங்கினேன்; என் பெயர் சுருங்கிவிட்டது' என்கிறார்.
மேலோட்டமாகப் பார்த்தால் இதன் மெய்ப்பொருள் விளங்காது.

தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிகரின் சீடர்தான் குமரகுருபரர். அவர் தன் குருநாதரைப் பார்க்க அவர் இருக்கும் திருவாரூர் செல்கிறார். ஊர் எல்லை வந்ததும் தன் பெயர் சுருங்கி விட்டது என்கிறார். "சீவன்' என்னும் நிலையில் உள்ள சீடன், குருநாதர் இருக்கும் ஊர் எல்லையை அடைந்ததும் "சிவன்' ஆகிய தன் தன்மையை அடைந்துவிட்டது என்பதையே அதாவது, சீவன் சிவனாகிவிட்டது என்பதையே இவ்வாறு சூட்சுமமாகக் குறிப்பிட்டுள்ளார்.

சீவன் என்பதில் "சீ' என்ற நெட்டெழுத்துக்கு 2 மாத்திரை அளவு. சிவன் என்பதில் "சி' என்ற குறிலுக்கு 1 மாத்திரை அளவு. இதையே சிலேடை நயம்பட,

"நற் கமலை ஊரில் குறுகினேன்
ஒரு மாத்திரை அளவு பேரில் குறுகினேன்' 

என்று, "சீவன்', "சிவன்' ஆனதையே "பேர் சுருங்கியது' என்று பாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com