பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தான் தேடி வைத்த பொருளைப் பின்னர் வந்து பயன்படுவதாகக் கருதற்க. தாம் அப்பொருளை நுகர்ந்தும் பிறருக்குக் கொடுத்தும், இருமைக்கும் அழகுண்டாகுமாறு செய்யத்தகுந்த இடம் நோக்கி அறங்களைச் செய்யின்
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

வைத்ததனை வைப்பென் றுணரற்க தாமதனைத்
துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ
எய்ப்பினில் வைப்பென் பது. (பாடல்-37)

தான் தேடி வைத்த பொருளைப் பின்னர் வந்து பயன்படுவதாகக் கருதற்க. தாம் அப்பொருளை நுகர்ந்தும் பிறருக்குக் கொடுத்தும், இருமைக்கும் அழகுண்டாகுமாறு செய்யத்தகுந்த இடம் நோக்கி அறங்களைச் செய்யின், தளர்ந்த காலத்து உதவும் பொருள் என்பது அதுவன்றோ? (க-து.) அறமே எய்ப்பினில் வைப்பாம். "எய்ப்பினில் வைப் பென்பது' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com