முழுவல்!

தமிழில் "முழுவல்' என்ற சொல்லாளுமை வியக்கத்தக்க வகையில் பயன்பாட்டில் இருந்து வந்ததுடன்,  பெயர்ச் சொல்லாகவும், வினைச் சொல்லாகவும் பயின்று வந்துள்ளது.
முழுவல்!

தமிழில் "முழுவல்' என்ற சொல்லாளுமை வியக்கத்தக்க வகையில் பயன்பாட்டில் இருந்து வந்ததுடன்,  பெயர்ச் சொல்லாகவும், வினைச் சொல்லாகவும் பயின்று வந்துள்ளது.

"முழுவல்' என்றால் ஒருவகை நீர்ப்பறவை என்றும், முழுமையான அன்பு மற்றும் விடாது தொடரும் அன்பு என்றும்  பொருள்படுகிறது. இறைவன்  நம் மீது கொண்ட அன்பையும் முழுவல் எனலாம். முழுவல் என்பது உழுவல், அன்பு என்ற பொருளிலும் வரும். 

ஆங்கிலத்தில் "அன்பு' என்ற பொருளில், ஈங்ங்ல் கர்ஸ்ங் என்றும், "நீர்ப்பறவை வகை' என்ற பொருளில் 

An aqatic bird என்றும், "விடாது தொடரும் அன்பு' என்ற பொருளில், Relenlessly pursuing love என்றும் வழங்கப்படும்.

குளக்கரையில் உள்ள ஒருவகை நீர்ப்பறவையை எடுத்துக் காட்டுகின்றார் மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனார்.

"திரைதவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்
எழுந்துவீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும்
அன்னச் சேவல் அரச னாக
பன்னிறப் புள்ளினம் பரந்தொருங் கீண்டி...'  (மணி.8.28-31)

"விடாது தொடரும் அன்பு' என்ற பொருளில் தணிகை புராணம், ""முழுவல் கடல் பெருத்தான்'' (நந்தி.6) என்றோதுகிறது. "அன்பு' என்ற பொருளில், விநாயக புராணம் ""பழுத்த முழுவல் அமரர்...'' (விநா.புரா.72:54) என்று சுட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com