பதிமூன்று ஆண்டுகளில் முதன்முறையாக தன் லோகோவை மாற்றிய 'யூ ட்யூப்' !

துவங்கப்பட்ட பதிமூன்று ஆண்டுகளில் பிரபல காணொளிப் பகிர்வு தளமான 'யூ ட்யூப்'  முதன்முறையாக தன்னுடைய லோகோ வடிவமைப்பை மாற்றியுள்ளது.
பதிமூன்று ஆண்டுகளில் முதன்முறையாக தன் லோகோவை மாற்றிய 'யூ ட்யூப்' !

சான் ப்ரான்ஸிஸ்கோ: துவங்கப்பட்ட பதிமூன்று ஆண்டுகளில் பிரபல காணொளிப் பகிர்வு தளமான 'யூ ட்யூப்'  முதன்முறையாக தன்னுடைய லோகோ வடிவமைப்பை மாற்றியுள்ளது.

பிரபல தேடுபொறி தளமான கூகிளின் உப பிரிவுகளில் ஒன்றாக, காணொளிப் பகிர்வுக்கான தளமாக 2004-ஆம் ஆண்டு 'யூ ட்யூப்' இணைய உலகில் அறிமுகமானது. அது முதல் உலகமெங்கும் காணொளிப் பகிர்வு மற்றும் தரவிறக்கம் ஆகிய சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக 'யூ ட்யூப்' திகழ்கிறது.

இப்பொழுது தனி நபர்கள் முதல் பிரபல நிறுவனங்கள் வரை தங்களுக்கென தனி 'யூ ட்யூப்' அலைவரிசைகளை வைத்துள்ளனர். அதன் மூலம் பெரும் புகழ் பெற்றவர்களும் உண்டு.

இந்நிலையில் ஆரம்பம் முதல் தனக்கென இருந்த வந்த லோகோவை 'யூ ட்யூப்' நிறுவனம் முதன்முறையாக தற்பொழுது மாற்றியுள்ளது  முன்னதாக 'யூ ட்யூப்' என்ற ஆங்கில வார்த்தையில் 'ட்யூப்' என்பது மட்டும் சிவப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துக்களிலும், யூ கருப்பு எழுத்திலும் இருக்குமாறு அதன் லோகோ காட்சியளித்தது.

தற்பொழுது அந்த சிவப்பு பின்னணி நீக்கப்பட்டு 'யூ ட்யூப்' என்னும் முழு வார்த்தையும் கருப்பு எழுத்துகளில் காட்சியளிக்கிறது. அதே நேரம் யூ ட்யூப்பின் பிரபலமான 'ப்ளே' பட்டன் சிவப்பு பின்னணியில் வார்த்தைகளுக்கு இடது பக்கத்தில் இடம் பிடித்துள்ளது.

இது தொடர்பாக கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மாற்றமானது வெவேறு விதமான கருவிகளில், சிறிய திரைகளில் கூட யூ ட்யூப் லோகோ சிறப்பாக செயல்பட உதவும் என்று தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com