அமெரிக்க துப்பாக்கிச்சூடு: 50 பேர் சாவு, குற்றவாளி சுட்டுக்கொலை 

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் திங்கட்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். குற்றவாளி சுட்டுக்கொல்லப்பட்டான்.
அமெரிக்க துப்பாக்கிச்சூடு: 50 பேர் சாவு, குற்றவாளி சுட்டுக்கொலை 

அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் மாகாணம் கேஸினோ வகை சூதாட்ட விடுதிகளுக்குப் பெயர் போனது. இங்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கேஸினோ வகை விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பார்ட்டி நடைபெற்றது. இதில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அப்போது அங்கு நடைபெற்ற அதிபயங்கர துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.

மான்டாலி பே என்ற கேஸினோ விடுதி ரூட் 91 என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல் என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபல கன்ட்ரி மியூஸிக் ஸ்டார் ஜேஸன் ஏல்டியான் என்பவர் பங்கேற்றார்.

அப்போது அதே விடுதியின் 32-ஆவது தளத்தில் இருந்த மர்ம நபர் திடீரென இந்த இசை நிகழ்ச்சியை நோக்கி தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான். 

இதன்காரணமாக அங்கு கூடியிருந்த பல நூறு பேர் சிதறி ஓடினர். இதில், 200-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 50 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில் அங்கு கூடிய அமெரிக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியவனைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். அப்போது நடந்த பதில் தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளி அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஆனால், அவனது பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட மறுத்தனர். மேலும், குற்றவாளி அப்பகுதியைச் சேர்ந்தவன் என்பதை மட்டும் தெரிவித்தினர்.

இருப்பினும் சில மணிநேரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவன் பெயர் ஸ்டீஃபன் பேடாக் (64 வயது) என்று தெரிவித்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களிலேயே இதுதான் மிக அதிபயங்கரம் மற்றும் மேசமானதாகவும் தெரிவித்தனர்.

முன்னதாக, அமெரிக்காவின் பள்ளி ஒன்றில் புகுந்த மர்ம நபர் இதேபோன்று அங்கு படித்து வந்த குழந்தைகளை சரமாரியாகச் சுட்டான். இதுகுறித்து, சமீபகாலங்களில் அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் அதிகரித்து வருவதாக அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா வேதனை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com