வடகொரிய சுரங்க விபத்தில் 200 பேர் பலி: அணு ஆயுதச் சோதனையால் விளைந்த விபரீதம்? 

வடகொரிய சுரங்க விபத்தில் 200 பேர் பலி: அணு ஆயுதச் சோதனையால் விளைந்த விபரீதம்? 

வடகொரியாவில் சமீபத்திய அணு ஆயுதச் சோதனை நடந்த இடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 200 பேர் பலியானாதாக, ஜப்பான் நாட்டு அசஹி செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

டோக்கியோ: வடகொரியாவில் சமீபத்திய அணு ஆயுதச் சோதனை நடந்த இடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 200 பேர் பலியானாதாக, ஜப்பான் நாட்டு அசஹி செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், தொடர் எதிர்வினையாக வடகொரியா அணு ஆயுதச் சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி அன்று மாபெரும் நிலத்தடி அணுகுண்டு வெடிப்புச் சோதனை ஒன்றை அந்நாடு நடத்தியது. இது அந்நாடு நிகழ்த்திய ஆறாவது சோதனையாகும்.

இந்த சோதனை நடந்து முடிந்த சில நாட்களில் சோதனை நடைபெற்ற புங்கிய-ரி என்னும் இடத்தில் உள்ள சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததாகவும், அந்த விபத்தில் 100 தொழிலாளர்கள் பலியானதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளது.

அத்துடன் தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளின் பொழுது மீண்டுமொரு முறை சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து விபத்து நிகழ்ந்தது. அப்பொழுது மேலும் 100 பேர் என மொத்தம் 200 பேர்  பலியானதாக கூறப்படுகிறது. அணு ஆயுதச் சோதனையின் காரணமாகவே இந்த விபத்துகள் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல்களை ஜப்பானின் அசஹி தொலைக்காட்சி  தெரிவித்துள்ளது.

வடகொரியாவினை பொறுத்த அளவில் எந்த பெரிய விபத்துக்களைக் குறித்தும் பொதுவாக செய்திகள் வெளிவராது. அதிலும்க குறிப்பாக நாட்டின் அணு ஆயுத்த் சோதனைகள் குறித்து செய்திகள் கண்டிப்பாக வெளியே வராது என்பதால் தொடர்ந்து மர்மம் நிலவுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com