'14.1 மில்லியன்' ஊழல் குற்றச்சாட்டு: பதவி விலகிய சுகாதாரத்துறை செயலர்!

தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு காரணமாக மனிதவள மேம்பாடு மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதவிலிருந்து டாம் பிரைஸ் சனிக்கிழமைவிலகினார்.
'14.1 மில்லியன்' ஊழல் குற்றச்சாட்டு: பதவி விலகிய சுகாதாரத்துறை செயலர்!

அமெரிக்காவின் தலைமை செயல் அதிகாரிகளில் மிகவும் முக்கியமாக விளங்கியவர் மனிதவள மேம்பாடு மற்றும் சுகாராத்துறை செயலர் டாம் பிரைஸ். இவர், அதிபர் டொனால்டு டிர்ம்ப் அரசாங்கத்தின் முக்கிய செயல் அதிகாரிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.

இந்நிலையில், டாம் பிரைஸ் மீது 14.1 அமெரிக்க டாலர்கள் ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜிநாமா
செய்தார். 

அமெரிக்க மாகாணங்களில் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணங்களின் போது தனக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பயணிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், இவை அனைத்துக்கும் தனி நபர் விமானத்தை பயன்படுத்தியது முதல்கட்ட விசாரணையில் அம்பலமானது. இதன்மூலம் இந்த ஊழலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

முன்னதாக, இதுபோன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் மீதான தவறுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதில், கடந்த 2016-ம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட வருமானவரி ஆவணங்களில் டாம் பிரைஸ் மற்றும் அவரது மனைவி (மருத்துவர்), ஆகியோர் அதிக சொத்து சேர்த்த தெரியவந்தது. மேலும், செயல் அதிகாரிகளில் அதிக பணக்காரர்கள் பட்டியலில் 9-ஆவது இடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இதர துறைகளின் தலைமை செயல் அதிகாரிகளான ஸ்காட் ப்ரூயிட், ரியன் ஸிங்கி ஆகியோர் மீதும் இதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரங்கள் தனக்கு கவலையும், ஏமாற்றமும் அளிப்பதாகவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com