விதைகளைப் பாதுகாக்க புதிய முறை

சிதம்பரம், ஏப். 21: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மரபணு விதைகள் பயிரிடுவது குறித்த விவாதம் வெற்றிகரமாக முடிந்து சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று மத்திய, ம
விதைகளைப் பாதுகாக்க புதிய முறை
Updated on
2 min read

சிதம்பரம், ஏப். 21: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மரபணு விதைகள் பயிரிடுவது குறித்த விவாதம் வெற்றிகரமாக முடிந்து சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில அரசுகள் அவற்றுக்கு தடை விதித்துள்ளன.

 இந்நிலையில் பாரம்பரிய விதை ரகங்களை பாதுகாப்பது ஒரு முக்கிய தேவையாகவும், பிரச்னையாகவும் உருமாறிவிட்டது. இத்தகைய சூழலில் பாரம்பரிய நாட்டு ரக விதைகளை விவசாயிகள் தங்கள் கிராமங்களில் பாதுகாத்து அடுத்த பருவத்துக்கு பயன்படுத்தும் நோக்கில் தற்போதைய புதிய விதைப் பாதுகாப்பு பத்தையம் ( New seed gr an ary) உருவாக்கப்பட்டுள்ளது.

விதை பத்தையத்தின் சிறப்புகள்: கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் விதை நெல், பயிர்களை சேமிக்க மண், மரம் மற்றும் இரும்பு பத்தையங்களே கிராமப் புறங்களில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 பல நடைமுறை சிக்கல்களை கொண்ட பாரம்பரிய விதைப் பத்தையங்களுக்கு ஒரு நல்ல மாற்றாக புதிய முறை விதைப் பத்தையம் உருவாக்கப்பட்டுள்ளது. மண் மற்றும் மரச் சீவல்கள் அல்லது மரத்துகள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய நவீன விதை பத்தையங்களின் எடை மிகக்குறைவு. இவற்றை அடுக்குகளாக உருவாக்கி உள்ள காரணத்தால் எளிதில் பிரித்துக் கொள்ளலாம். மாட்டிக்கொள்ளவும் செய்யலாம்.

 இப்புதிய முறை விதைப் பத்தையத்தை தேவை இல்லாத காலங்களில் எளிதாக பிரித்து பரண்களில் அடுக்கி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது மீண்டும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

÷செயல்பாடுகள்: புதிய விதை முறை பத்தையத்தில் விவசாயிகள் அடுத்த பருவத்துக்கு அல்லது ஆண்டுக்கு தேவையான விதை நெல், பயிர் வகைகளை நன்றாக காய வைத்து வேப்ப இலை, நொச்சி இலையை கலந்து சேமித்து வைக்கின்றனர். பின்னர் பத்தையத்தை மூடி ஒரு அறையின் ஓரத்தில் வைத்து விடுகின்றனர்.

 தொடர் மழை மற்றும் வெயில் காலத்தில் ஈரப்பதத்தில் இருந்து விதைகளை பாதுகாத்து பூச்சி தாக்குதல்களையும் தடுக்கிறது. நன்றாக வெயில் வரும் காலங்களில் பத்தையத்தை பிரித்து காய வைத்து விதைகளை பாதுகாக்கும் நடைமுறையும் உள்ளது.

 சில சமயங்களில் பருவம் தப்பி அல்லது சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள முடியாத நடைமுறை சூழல் எழும்போது பத்தையத்தில் உள்ள விதை நெல்லை வெளியே எடுத்து சுத்தப்படுத்தி பழைய வேப்ப இலைகளை, நொச்சி இலைகளை அகற்றிவிட்டு புதிய இலைகளைப் போட்டு மீண்டும் விதை நெல்லை பாதுகாக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

÷பிற பயன்கள்: தற்போதைய புதிய முறை விதை பத்தையம் அளவுக்கு ஏற்றவாறு ரூ.800 முதல் ரூ.1200 வரை வேளாண் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

 விவசாயிகள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும் பல ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். விவசாயிகள், பண்ணை மகளிர் தங்களின் பாரம்பரிய விதைகளை இப்புதிய முறை விதை பத்தையங்கள் வாயிலாக எளிதில் பாதுகாக்க முடியும்.

 எனவே குறைந்தளவு முதலீட்டில், நீண்ட நாள் விதைகளை பாதுகாத்து நமது பாரம்பரிய சொத்துகளை சேமித்து வைக்கலாம்.

 இப்புதிய விதை முறை விதை பத்தையங்களைப் பயன்படுத்தி குறைந்த செலவில் வேளாண் பணிகளை செய்து விவசாயிகள் அதிக வளம் பெற முடியும் என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com