சினை பிடிக்காத கறவை மாடுகள்: தீர்வு என்ன?

கறவை மாடுகள் சினை பிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள் குறித்து நாமக்கல்
சினை பிடிக்காத கறவை மாடுகள்: தீர்வு என்ன?
Updated on
1 min read

கறவை மாடுகள் சினை பிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள் குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கல்லூரியின் விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் என்.நர்மதா, எம்.சக்திவேல், எம்.ஜோதிலட்சுமி ஆகியோர் புதன்கிழமை கூறியது:

கறவை மாடுகள் சரியான காலத்தில் சினை பிடித்து ஆண்டுக்கு ஒரு கன்று ஈன வேண்டும். இல்லையேல், பால் உற்பத்தி குறைந்து, பராமரிப்புச் செலவு அதிகரித்து நஷ்டம் ஏற்படும்.

மூன்று முறை சரியான பருவத்தில் கருவூட்டல் செய்த பின்னரும் சினை பிடிக்காமல் இருப்பது தாற்காலிக மலட்டுத் தன்மை எனப்படும். சரியான சினை தருணத்தைக் காணத் தவறுதல், சரியான பருவத்தில் சினைப்படுத்தத் தவறுதல், சினைப்படுத்தும் தருணத்தில் ஏற்படும் அயர்ச்சி, சாதகமற்ற தட்ப வெப்பநிலை போன்ற பராமரிப்பின்மைக் குறைபாடுகளாலும், தீவனம், சத்துப் பற்றாக்குறை, இனப் பெருக்க உறுப்புகளைத் தாக்கும் நோய்கள், கனநீர் பற்றாக்குறை, மரபியல், உடற்கூறு பிரச்னைகள், சினைப் பருவத்துக்கு வந்தும் சினை தங்காமை, கிடேரிகளை சினைப்படுத்துதல் ஆகிய காரணங்களாலும் இந்தத் தாற்காலிக மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

இத்தகை பாதிப்புகளைத் தவிர்க்க கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி தக்க சமயங்களில் தடுப்பூசி போடுவதுடன், கொட்டைகைகளை சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். நோய் வாய்ப்படும் சூழல் காணப்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகி உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதேபோல, சினை பிடிக்காத பசுக்களில் 5 முதல் 10 சதம் வரை மட்டுமே காணப்படும் நிரந்தர மலட்டுத் தன்மைக்கு பசுக்களில் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகள்தான் காரணம்.

இரட்டைக் கன்றாக ஆண் கன்றுடன் பிறந்த பெண் கன்றின் இனப் பெருக்க உறுப்புகள் பாதிப்படைந்து விடுவதால் இந்தக் கன்றும் சினையாகாது. இந்தக் குறைபாடுகள் மரபுக் கோளாறுகளால் ஏற்படுவதால் சிகிச்சை மூலம் சரிபடுத்த முடியாது. ஆகையால், இந்தக் குறைபாடுள்ள கிடேரிகளைப் பண்ணையிலிருந்து நீக்கிவிட வேண்டும்.

விந்தணு, சினை முட்டை ஆகியவற்றிலுள்ள மரபணுக்களில் அழிவு குணங்கள் இருந்தால் கருவுறுதல் பாதிக்கப்படும். வயது முதிர்ந்த பசுக்கள், காளைகள் குறைபாடுள்ள முட்டை, விந்தை உருவாக்குவதால் வயது அதிகமான மாடுகளில் சினை பிடிக்கத் தாமதம் ஏற்படுகிறது. எனவே, வயது முதிர்ந்த மாட்டையும் பண்ணையிலிருந்து நீக்கிவிட வேண்டும்.

மாடுகள் சினை பிடிக்கவில்லையெனில், எத்தனை நாளுக்கு ஒருமுறை சினைக்கு வருகிறது என்று பார்க்க வேண்டும். சினை ஊசி போட்ட 21 நாள்களுக்குப் பிறந் சினை தருண அறிகுறிகளை வெளியிட்டால் அது சினை பிடிக்கவில்லை என்பது தெரிந்து விடும். உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

இத்தகைய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மையை நீக்கி பெரும்பாலான பசுக்களை கருவுறச் செய்ய முடியும் என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com