"காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதை நிறுத்த வேண்டும்': வாட்டாள் நாகராஜ்

காவிரி நதி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
"காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதை நிறுத்த வேண்டும்': வாட்டாள் நாகராஜ்

காவிரி நதி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

மைசூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
 இரு பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை விதித்து, சட்டப் பேரவைத்தலைவர் கே.பி.கோலிவாட் உத்தரவிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். பேரவையில் விவாதிக்காமல் பத்திரிகையாளர்களுக்கு தண்டனை விதிக்க பேரவைத்தலைவர்கோலிவாட் உத்தரவிட்டது சரியானதல்ல. இதனால் அவையின் கெளரவம் பாழாகியுள்ளது. தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாலும், ஊடகத்தின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தியதாலும் கே.பி.கோலிவாட் தனது பேரவைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்யவேண்டும்.

கர்நாடகத்தில் போதுமான மழை பெய்யாமல் கடுமையான வறட்சிநிலவிவரும் நிலையில், காவிரி நதிநீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளது சரியல்ல. இதற்காக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலை வன்மையாக கண்டிக்கிறேன். கர்நாடக அரசின் இந்த முடிவு கர்நாடக விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும். எனவே, காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவதை உடனடியாகநிறுத்த வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com