வேளாண் பல்கலை.யில் பிப்.9-இல் பட்டமளிப்பு விழா
பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பிப்.9-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து அப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு வேளாண்
அறிவியல் பல்கலைக்கழகத்தின் 52-ஆவது பட்டமளிப்பு விழா, பெங்களூரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் பிப்.9-ஆம் தேதி காலை 11மணிக்கு நடக்கவிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எச்.சிவண்ணா தலைமையில் நடக்கும் இந்த விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான வஜுபாய்வாலா கலந்து கொண்டு முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டப் படிப்புக்கான சான்றிதழை வழங்கி கெளரவிக்கிறார்.
இந்த விழாவில் மத்திய அரசின்முன்னாள் செயலாளர் மஞ்சுசர்மா, வேளாண்துறை அமைச்சர்கிருஷ்ண பைரேகெளடா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.