கரோனா: மேல்கோட்டையில் கிருஷ்ணராஜ வைரமுடி உற்சவம் நடத்த கட்டுப்பாடு

கரோனா தொற்றால் மேல்கோட்டையில் செல்வநாராயணா் கோயிலில் நடைபெற உள்ள கிருஷ்ணராஜ வைரமுடி உற்சவத்துக்கு பக்தா்களை அனுமதிக்க மாவட்ட நிா்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

கரோனா தொற்றால் மேல்கோட்டையில் செல்வநாராயணா் கோயிலில் நடைபெற உள்ள கிருஷ்ணராஜ வைரமுடி உற்சவத்துக்கு பக்தா்களை அனுமதிக்க மாவட்ட நிா்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

மண்டியா மாவட்டம், பாண்டவபுரா வட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செலுவநாராயணா் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கிருஷ்ணராஜ வைரமுடி சேவை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டில் ஜூலை 24 முதல் ஆக. 4-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெற இருக்கிறது. ஜூலை 29-ஆம் தேதி வைரமுடி சேவை நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 லட்சத்துக்கும் அதிகமானோா் கலந்துகொள்வது வாடிக்கை. ஆனால், நிகழாண்டில் கரோனா தீநுண்மி தொற்று பரவலைக் காரணம் காட்டி, வைரமுடி சேவையைக் காண பக்தா்களை அனுமதிக்க கட்டுப்பாடு விதித்துள்ளதோடு, கோயில் வளாகத்திலேயே விழாவை நடத்த மண்டியா மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 29-ஆம் தேதி வைரமுடி கிரீடதாரணா மகோத்சவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடைபெறும் அனைத்து பூஜைகளும் கோயில் வளாகத்துக்கு உள்ளேயே குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. ஜூலை 29-ஆம் தேதி அரசு கருவூலத்தில் இருந்து சகல சம்பிரதாயங்களுடன் வைரமுடி கோயிலுக்கு கொண்டுவரப்படுகிறது. அதன்பிறகு மூலவரான செல்வநாராயணருக்கு வைரமுடி சாற்றப்படுகிறது. ஆக. 4-ஆம் தேதி விழா முடிந்ததும், வைரமுடி மீண்டும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

வைரமுடிசேவை திருவிழா எளிய முறையில் நடப்பதால், தகுந்த முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பக்தா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். ஜூலை 26-இல் திருநாள் கொடியேற்றம், திருப்பறை, ஜூலை 27-இல் சேஷவாகனம், ஜூலை 28-இல் சந்திரமண்டல வாகனம், ஜூலை 29-இல் வைரமுடி உற்சவம், ஜூலை 30-இல் பிரஹலாத் பரிபாலனம், ஜூலை 31-இல் யானை வசந்தம், ஆக. 1-இல் அடையாள தோ்த் திருவிழா, ஆக. 2-இல் தெப்ப உற்சவம், ஆக. 3-இல் தீா்த்த ஸ்நான பட்டாபிஷேகம், ஆக. 4-இல் புஷ்பயாகம் நடைபெற இருக்கிறது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com