பெங்களூரில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் கெலயரபலகாவைச் சேர்ந்தவர் சாரதம்மா. இவர் செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணியளவில் அதே பகுதியில் உள்ள நீச்சல் குளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்திலிருந்த ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள 15 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது றித்து மகாலட்சுமி லேஅவுட் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: பெங்களூரு வித்யரண்யபுரா சம்பரமா கல்லூரி அருகே வசித்து வருபவர் ராஜு. இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் தங்கச் சங்கிலி, செல்லிடப்பேசியை ஜன்னல் ஓரம் வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தாராம். புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஜன்னல் வழியே கையை நுழைத்த யாரோ, தங்கச்சங்கிலி, செல்லிடப்பேசியை திருடிச் சென்றனர். இதுகுறித்து வித்யரண்யபுரா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய விளையாட்டு ஆணையத்தில் விளையாட்டுப் பயிற்சியாளர் பணி: 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
குழந்தைத் தொழிலாளர்களா? திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!
ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


