நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

குற்றச் செய்திகள்

Updated On :23 ஜூலை 2018, 9:23 am IST

இளைஞர் கொலை
சென்னப்பட்டணா அருகே கழுத்தை அறுத்து இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணா வட்டம், இந்திரா குடியிருப்பில் வசித்து வந்தவர் வாசீம் (26).  நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றவர், சென்னப்பட்டணா அருகே லாலாகட்டா சாலையில் உள்ள தோட்டத்தில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த சென்னப்பட்டணா கிழக்கு போலீஸார் வாசீம்மின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோயிலில் திருட்டு
தும்கூரு:  துருவேகெரே வட்டம், மாரசந்திரா கிராமத்தில் ஸ்ரீ கெம்பம்மா தேவி கோயிலுக்குள் நுழைந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இந்தக் கோயிலுக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள் சிலைகளுக்கு அணிவித்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளையும், உண்டியலை உடைத்து ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். தாண்டினசிவரா போலீஸார் விசாரிக்கின்றனர்.

கல்லூரி மாணவி சாவு
பெங்களூரு:  சிமென்ட் கலவை லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
பெங்களூரு காட்டன்பேட்டையை சேர்ந்தவர் லாவண்யா. இவரது சகோதரி பிரீதி (19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் பட்டப்படிப்பு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை நடைப்பயிற்சியில் ஈடுபட இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். கும்பிகல் சாலையில் சென்றபோது சிமென்ட் கலவை லாரி இவர்கள் மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி பிரீதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வி.வி. புரம் போக்குவரத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் ஆயத்த ஆடை ஊழியர் சாவு
பெங்களூரு:  எலக்ட்ரானிக்சிட்டி பசவப்புராவைச் சேர்ந்தவர் சந்திரப்பா (45). இவர் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தாராம். சனிக்கிழமை இரவு பணிமுடிந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். எலக்ட்ரானிக்சிட்டி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

பேருந்து-கார் மோதியதில் 2 பேர் சாவு
பெங்களூரு:  தனியார் பேருந்து மீது கார் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு ஊரகம், சந்தாப்புரா ஒசூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலை தடுப்புச்சுவரில் மோதியதுடன் எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. அப்போது கார் தீப்பிடித்து எரிந்ததில் பேருந்துக்கும் தீப்பரவியது.  பேருந்தில் தீப்பரவியதை அடுத்து அதிலிருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பினர். காரிலிருந்த 2 பேரும் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சூர்யாநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.