எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கர்நாடகத்தில் மின் கட்டணம் 38 பைசா உயர்வு

மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 38 பைசா அளவுக்கு உயர்த்தி கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :14 மே 2018, 9:21 pm

மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 38 பைசா அளவுக்கு உயர்த்தி கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கே.சங்கர்லிங்கே கெளடா செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் உள்ள மின்வழங்கல் நிறுவனங்கள், ஒரு யூனிட்டுக்கு சராசரியாக 82 பைசா முதல் 162 பைசா வரை கட்டண உயர்வு கேட்டிருந்தன.
இதை பரிசீலித்த ஆணையம், ஒரு யூனிட் மின்சாரத்தின் கட்டணத்தை 20 பைசா முதல் 60 பைசா வரை உயர்த்த தீர்மானித்துள்ளது. எல்லா வகையான மின் கட்டணமும் சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 38 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது தற்போதைய கட்டணத்தில் இருந்து 5.30 சதவீத உயர்வாகும். புதிய கட்டண விகிதம் ஏப்.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வீடுகள்
பெங்களூரு மாநகர மின்வழங்கல் நிறுவனத்துக்குள்பட்ட மற்றும் நகர்புறங்களில் உள்ள வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 25 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. நிரந்தரக் கட்டணத்தை சேர்த்தால் யூனிட் ஒன்றுக்கு 38 பைசா கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது 5.93 சதவீத உயர்வாகும். இதர மின்வழங்கல் நிறுவனங்களின் ஆளுகைக்குள்பட்ட வீடுகளுக்கான பிரிவில் ஒரு யூனிட் மின்கட்டணம் 30 பைசாவாக உயர்த்தப்படுகிறது. இது 4.69 சதவீத உயர்வாகும்.
வணிக நிறுவனங்கள்
வணிக மற்றும் தொழிலகங்களின் மின் கட்டணம் சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் 25 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள குறைந்த மின் அழுத்த தொழில் பயனாளர்கள் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு கூடுதலாக 25 பைசாவும், பெங்களூரு உள்ளிட்ட மாநகராட்சிகளின் வரம்புக்குள்பட்ட உயர்மின் அழுத்த தொழில் பயனாளர்கள் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு கூடுதலாக 20 பைசா செலுத்த நேரிடும்.
27.17 லட்சம் நீர்ப்பாசன பம்ப்செட்களுக்கு மற்றும் 28.42 லட்சம் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக அனைத்து மின்வழங்கல் நிறுவனங்களுக்கும் மாநில அரசு ரூ.11,048 கோடி மானியம் வழங்க வேண்டியுள்ளது. ஆனால், மாநில அரசு தனது பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. ரூ.3 ஆயிரம் நிலுவைத்தொகை உள்ளது.
உயர்மின் அழுத்த தொழில் பயனாளர்களை ஊக்குவிக்க காலை 10 முதல் மாலை 6 மணி வரை பயன்படுத்தப்படும் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.1 தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேபோல, இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை மின்சாரத்தை பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 தள்ளுபடி செய்யப்படுகிறது.
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை பெருக்குவதற்காக அதற்கு புதிய மின் கட்டணத்தை விதித்திருக்கிறோம். அதன்படி ஒரு யூனிட் மின்சாரத்தின் கட்டணம் ரூ.4.85-ஆக இருக்கும். மேலும், மின்னேற்று நிலையங்களை அமைக்க முன்னுரிமையோ, உரிமமோ தேவையில்லை. பெங்களூரு மெட்ரோ ரயில்கழகத்தின் மின் கட்டணத்தை ஒரு யூனிட்டை ரூ.6-இல் இருந்து ரூ.5-ஆக குறைத்திருக்கிறோம்.
இதன்மூலம் மெட்ரோ ரயில்கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு வாய்ப்பில்லாவிட்டாலும் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை.
கர்நாடகம் முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தையும் ஒரு யூனிட்டுக்கு 40 பைசாவாக குறைத்திருக்கிறோம். ரயில்சேவைகள் அதிகளவில் மின்மயமாக்கப்பட வேண்டுமென்பது எங்கள் நோக்கமாகும்.
அதன்படி, கர்நாடகம் முழுவதும் ரயில்வே பயன்படுத்தும் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.6-ஆக நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.