மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு கால அட்டவணையை கர்நாடக உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.) வெளியிட்டுள்ளது.

Updated On :21 மே 2018, 10:53 pm

கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு கால அட்டவணையை கர்நாடக உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.) வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2017-18-ஆம் கல்வியாண்டுக்கான கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு 2018 ஜூன் 21 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் துணைத் தேர்வுகள் காலை 9.30 மணிக்கு தொடங்குகின்றன. ஜூன் 21-இல் கணிதம்; ஜூன் 22-இல் முதல்மொழிப்பாடம்-கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், உருது, ஆங்கிலம், சமஸ்கிருதம்; ஜூன் 25-இல் அறிவியல்; ஜூன் 26-இல் இரண்டாம் மொழிப் பாடம்-ஆங்கிலம், கன்னடம்; ஜூன் 27-இல் சமூக அறிவியல்; ஜூன் 28-இல் மூன்றாம் மொழிப் பாடம்-இந்தி, கன்னடம், ஆங்கிலம், அரேபிக், பெர்ஷியன், உருது, சமஸ்கிருதம், கொங்கணி, துளு பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. முதல் மொழிப் பாடம் 100 மதிப்பெண்ணுக்கும், இரண்டாம் மொழிப் பாடம், மூன்றாம் மொழிப் பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் 80 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடத்தப்படும். வினாத் தாள்களை மாணவர்கள் படிப்பதற்காக, தேர்வுக்கு முன்பாக 15 நிமிடங்கள் தரப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழிப் பாடங்கள் இரண்டே முக்கால் மணிநேரமும், இதர பாடங்கள் மூன்றேகால் மணி நேரமும் தேர்வு நடைபெறும். தேர்வு கால அட்டவணை, எல்லா பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்ககால அவகாசம் நீட்டிப்பு...
கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ள செய்தி:
2017-18-ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு, ஜூன் 21 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தேர்வெழுத தகுதியான மாநில அரசு, அரசு மானியம் பெறும், அரசு மானியம் பெறாத பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து வருகை தரும் மறுதேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 21-ஆம் தேதி, அதற்குரிய கட்டணங்களை பள்ளி/கல்லூரி நிர்வாகங்கள் செலுத்த மே 22-ஆம் தேதி வரையும் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களின் நலன் கருதி, துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 23-ஆம் தேதி வரையும், கட்டணங்களை வாரியத்தின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான கடைசி தேதி மே 24-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு..
எஸ்எஸ்எல்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதாக கருதும் மாணவர்கள் தங்கள் வினாத்தாள்களை மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி: 2017-18-ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதாக கருதும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறவும் மற்றும் மறுகூட்டலுக்கும் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்தால், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தால் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் கிடைத்த 7 நாள்களில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமதிப்பீடுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.700 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் மறுமதிப்பீடுக்கான விண்ணப்பங்களை எல்லா பள்ளிகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.