சிறுவர்களின் திறன் அறியும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறுவர்களின் திறன் அறியும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

சிறுவர்களின் திறன் அறியும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திறன் அறியும் போட்டியின் இயக்குநர் பூஜா சித்தார்த் ராவ் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி, சிறுவர்களிடம் பல்வேறு திறமைகள் மறைந்துள்ளன. எனவே, மாணவர்களின் தனித்திறன்களை வெளியே கொண்டு வரும் வகையில், பெங்களூரில் திறனறியும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் விண்ணப்பங்களை கட்டணமின்றி, இலவசமாக ஜன. 10-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். 
பெங்களூரு புனிதர் ஜோசப் பள்ளி வளாகத்தில் ஜன. 26-ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்று பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து 2-ஆம், 3-ஆம் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. 
மாணவர்களை ஊக்கப்படுத்த இதுபோன்ற போட்டிகள் அவசியம் என்றார். 
மேலும் விவரங்களுக்கு ‌i‌n‌f‌o@‌t​a‌l‌e‌n‌t‌s‌p‌e​c‌t​a​c‌u‌l‌u‌m.​c‌o‌m, ‌ta‌l‌e‌n‌t‌s‌p‌e​c‌t​a​c‌u‌l‌u‌m@‌g‌m​a‌i‌l.​c‌o‌m  என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com