மார்ச் 31-ஆம் தேதி கர்நாடக அதிமுக சார்பில் பாஜக வேட்பாளர் பி.சி.மோகனை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநில அதிமுக செயலாளர் எம்.பி.யுவராஜ் வெளியிட்ட அறிக்கை: மறைந்த தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பாதையை பின்பற்றி வழிநடத்தி வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் ஆணையின்படி, கர்நாடகத்தில் நமது தோழமை கட்சியான பாஜகவின் மத்திய பெங்களூரு தொகுதியின் வேட்பாளர் பி.சி.மோகன் அவர்களின் அறிமுகம் கூட்டம், மாநில அதிமுக சார்பில் அவைத் தலைவர் கே.முனிசாமி தலைமையில் மார்ச் 31-ஆம் தேதி காந்திநகர் தொகுதி ஸ்ரீராமபுரத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெங்களூரு மத்திய தொகுதியில் பி.சி.மோகன் அவர்களின் வெற்றிக்கு அதிமுக, பாஜக ஒன்றிணைந்து பாடுபடுவோம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.