பெங்களூரு நகர கிழக்கு இரண்டாம் துணை மண்டலத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.12) குடிநீர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிழக்கு இரண்டாம் துணைமண்டலத்தில் உள்ள ஏ.இ.சி.எஸ். லேஅவுட், ஹூடி, புவனேஸ்வரிநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை குடிநீர் குறைதீர் முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோகத் தாமதம், கழிவுநீர் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகளை குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவாரணம் பெறலாம். இதுகுறித்து மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 22945115.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.