இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் 7 பேர் கைது
By DIN | Published On : 17th April 2019 02:51 AM | Last Updated : 17th April 2019 02:51 AM | அ+அ அ- |

இரு சக்கர வாகன திருட்டு வழக்குகளில் 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த சந்தோஷ் (22), சரத் (21), ரோஹித்ரெட்டி (21), முபாரக் (21), மோகன்சிங் (19), சந்தன் (24), மற்றொரு சந்தோஷ் (18) ஆகியோர் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவியைப் பயன்படுத்தி திருடி வந்தனராம்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த நந்தினி லேஅவுட் போலீஸார், 7 பேரையும் கைது செய்து, ரூ. 2.15 லட்சம் மதிப்புள்ள 10 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...