தேரோட்டம்: அல்சூர் காவல் சரகத்தில் மது விற்கத் தடை
By DIN | Published On : 26th April 2019 03:08 AM | Last Updated : 26th April 2019 03:08 AM | அ+அ அ- |

பெங்களூரு அல்சூரில் சோமேஸ்வரர், காமாட்சியம்மா கோயில் தேரோட்டம் ஏப். 27-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அப் பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களுரு அல்சூர் காவல் சரகத்தில் உள்ள சோமேஸ்வரர், காமாட்சியம்மா கோயில் தேரோட்டம் ஏப். 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அல்சூர் காவல் சரகத்தில் 27-ஆம் தேதி காலை 8 மணி முதல் 28-ஆம் தேதி மாலை 5 மணி வரை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விழாவையொட்டி அல்சூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.