ஆக.6-இல் இசை தேர்வு முடிவுகள் வெளியீடு
By DIN | Published On : 04th August 2019 05:15 AM | Last Updated : 04th August 2019 05:15 AM | அ+அ அ- |

சிறப்பு இசை, நாட்டியம் மற்றும் தாளவாத்தியப் பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஆக.6-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2019-ஆம் ஆண்டுக்கான சிறப்பு இசை, நாட்டியம், தாளவாத்தியப்பாடங்களுக்கான தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. அப்போது நடைபெற்ற முதுநிலை, முன் சிறப்பு நிலை, சிறப்பு நிலை இறுதி எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் ஆக.6-ஆம் தேதி காலை 10மணிக்கு அனைத்து தேர்வு மையங்களிலும் அறிவிக்கப்படுகின்றன. ஆக.5-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். விடைத்தாள்களின் நகல்கள், மறுமதிப்பீட்டுக்கு ஆக.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...