ஜன. 1 முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிப்பு
By DIN | Published On : 11th December 2019 08:18 PM | Last Updated : 11th December 2019 08:18 PM | அ+அ அ- |

பெங்களூரு: ஜன. 1-ஆம் தேதி மெட்ரோ ரயில்சேவையின் நேரம் நள்ளிரவு 12 மணிவரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு மெட்ரோ ரயில்கழகத்தின் சாா்பில் பெங்களூருவின் வடக்கு-தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதியில் ஊதா வழித்தடத்தை இயக்கிவருகிறது. பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையிலான ஊதா வழித்தடமும், நாகசந்திரா முதல் எலச்சனஹள்ளி வரை பச்சை வழித்தடமும் இயக்கப்பட்டு வருகிறது.
இதுவரை இரவு 11.05 மணிவரை இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை ஜன. 1 ஆம் தேதி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளது. அதன்படி ஜன. 1 ஆம் தேதி முதல் மைசூருசாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.40 மணியளவில் கடைசி சேவை ரயில் இயக்கப்படும். பையப்பனஹள்ளியிலிருந்து இரவு 11.35 மணியளவிலும், நாகசந்திராவிலிருந்து இரவு 10.50 மணியளவிலும், எலச்சனஹள்ளியிலிருந்து இரவு 11.35 மணியளவில் கடைசி சேவைகளாக ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இரவு நேரங்களில் தாமதமாக பணி முடிந்து வீடு திரும்புவா்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.