நிலத் தகராறில் தந்தை, மகன் கொலை
By DIN | Published On : 06th February 2019 08:55 AM | Last Updated : 06th February 2019 08:55 AM | அ+அ அ- |

நிலத் தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்தவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
பெங்களூரு ஊரகம் ஹொசகோட்டை முத்தகதனஹள்ளியைச் சேர்ந்த விவசாயி நாராயண ரெட்டி (60). இவரது மகன் லிங்காரெட்டி (32). இந்த நிலையில், நாராயண ரெட்டிக்கும், பாபு (36) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளாக நிலத்தகராறு உள்ளது. இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை நாராயண ரெட்டியும், அவரது மகன் லிங்காரெட்டியும் தங்கள் நிலத்தில் உள்ள நீலகிரி மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு வந்த பாபு, நாராயணரெட்டியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் லிங்காரெட்டி, நாராயணரெட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து, அனுகொண்டனஹள்ளி காவல் நிலையத்தில் பாபு சரணடைந்தார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...