மறைந்த சித்தகங்கா பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளுக்கு பாரதரத்னா விருது வழங்க வீரக்தா மடாதிபதி அபிநவ் மல்லிகார்ஜுன தேசிகேந்திர சுவாமிகள் தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சிவக்குமார சுவாமிகள் 1941-ஆம் ஆண்டு தும்கூரு சித்தகங்கா மடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 80 ஆண்டு காலம் சுமார் 80 ஆயிரம் மாணவர்களுக்கு உணவு, உடை, கல்வி, தங்க இடம் வழங்கி சேவை புரிந்துள்ளார். அவரது சேவையை பாராட்டி மாநில அரசு 2007-ஆம் ஆண்டி கர்நாடக ரத்னா விருதையும், 2015-ஆம் ஆண்டில் மத்திய அரசு பத்மபூஷன் விருதையும் வழங்கி கெளரவித்துள்ளது.
மாற்று மதத்தைச் சேர்ந்த அன்னை தெரெசாவிற்கு பிறகு மத்திய அரசு ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த எவருக்கும் பாரதரத்னா விருதை வழங்கி கெளரவிக்கவில்லை. சிவக்குமார சுவாமிகள் மதம், ஜாதிகளை கடந்து சேவை செய்தவர். அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.