புலி, சிறுத்தை நகம் விற்பனை: 3 பேர் கைது
By DIN | Published On : 12th February 2019 08:48 AM | Last Updated : 12th February 2019 08:48 AM | அ+அ அ- |

புலி, சிறுத்தை நகம் விற்பனை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், நாகமங்களாவைச் சேர்ந்தவர்கள் கவிதாகுமார் (23), கோபி (25), சஞ்சய் (24). இவர்கள் 3 பேரும் பெங்களூரு யஸ்வந்தபுரம் பூ சந்தை அருகே புலி, சிறுத்தை நகங்களை விற்பனை செய்து வந்தனராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 142 நகங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆர்.எம்.சி.யார்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.