சமையலறை உபகரணங்கள் கண்காட்சி
By DIN | Published On : 04th January 2019 08:14 AM | Last Updated : 04th January 2019 08:14 AM | அ+அ அ- |

பெங்களூரில் சமையலறை உபகரணங்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த பாரீக் செய்தியாளர்களிடம் கூறியது:
சர்வதேச அளவில் சமையலறைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் சமையலும், சமையலறைக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அண்மைக்காலமாக வேகமாகவும், சுவையாகவும் சமைக்க பல நவீன உபகரணங்கள் வந்துள்ளன.
இந்த உபகரணங்கள் நுகர்வோரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், பெங்களூரில் ஜன. 4-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை பெங்களூரு மான்போ மாநாட்டு அரங்கில் சமையலறை உபகரணங்கள் கண்காட்சி நடைபெறுகிறது.கண்காட்சியில் குளியலறை உபகரணங்களும் இடம்பெறுள்ளன என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...