பெண் கொலை வழக்கில் இளைஞர் கைது
By DIN | Published On : 04th January 2019 08:13 AM | Last Updated : 04th January 2019 08:13 AM | அ+அ அ- |

பெண் கொலை வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு கெம்பேகெளடா நகரைச் சேர்ந்தவர் மானசா. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த 400 கிராம் தங்கநகை, ரூ. 1 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீஸார், 6 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் தொடர்புடைய கெம்பேகெளடா நகரைச் சேர்ந்த ராகவேந்திரா (35) என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் ராகவேந்திராவுக்கு ராஜராஜேஸ்வரிநகரில் நடைபெற்ற வேறு ஒரு கொலை வழக்கிலும் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கெம்பேகெளடாநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.