மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி: போக்குவரத்தில் மாற்றம்
By DIN | Published On : 04th January 2019 08:15 AM | Last Updated : 04th January 2019 08:15 AM | அ+அ அ- |

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி காரணமாக பெங்களூரில் ஒருசில இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம், பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகளை வழங்கிவருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக, 6-ஆவது பாதையில் உயர்மேம்பாலம் கட்டும்பணி நடந்துவருகிறது. இதற்காக பன்னர்கட்டா சாலையில் உள்ள ஜெயதேவா சந்திப்பில் தூண்களை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
இதன்காரணமாக, ஜெயதேவா சந்திப்பில் இருந்து ஜேடிமர சந்திப்புவரையிலான துணைசாலை ஜன.3-ஆம் தேதி முதல் மூடப்படுகிறது. எனவே, மத்திய பட்டுவாரிய சந்திப்பில் இருந்து ஜேடிமரா சந்திப்பு வரையிலான தடத்தின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பட்டுவாரிய சந்திப்பில் இருந்து வாகனங்கள் 16-ஆவது பிரதானசாலையில் இடதுபக்கம் திரும்பி, 7-ஆவது குறுக்குசாலை வழியாக கோபாலன்மால் அருகில் பன்னர்கட்டா சாலையைஅடையலாம். ஜெயதேவா சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்களை குறிக்கும் அடையாளப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.