"திருவள்ளுவர் பிறந்த நாளில் தமிழர்-கன்னடர் ஒற்றுமையை வலியுறுத்துவோம்'

திருவள்ளுவர் பிறந்த நாளில் தமிழர்-கன்னடர் ஒற்றுமையை வலியுறுத்துவோம் என்று மாநில காங்கிரஸ்

திருவள்ளுவர் பிறந்த நாளில் தமிழர்-கன்னடர் ஒற்றுமையை வலியுறுத்துவோம் என்று மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தொழிலாளர் பிரிவு தலைவருமான எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சர்வதேச அளவில் மனிதகுலம் சிறப்பாக வாழ்வதற்கான திருக்குறளைத் தந்தவர் திருவள்ளுவர். அவரின் பிறந்த நாளை ஜன. 15-ஆம் தேதி பெங்களூரு அல்சூரு ஏரிக்கரை திருவள்ளுவர் சிலை அருகே கொண்டாடப்பட உள்ளது. திருவள்ளுவர் பிறந்த நாளில் தமிழர்-கன்னடர் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அனைவரும் ஜாதி, மதம், மொழி கடந்து பெரும்திரளாக மக்கள் கலந்து கொள்ள வேண்டும். 
விழாவுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் முன்னிலை வகிக்கிறார். விழாவில் முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், டி.கே.சிவக்குமார், கிருஷ்ண பைரேகெளடா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ், துணைத் தலைவர் ஈஸ்வர்கண்ட்ரே, முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கே.எச்.முனியப்பா எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், புதுச்சேரி மாநில அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம், உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 
திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பி.சி.மோகன் எம்.பி, முன்னாள் அமைச்சர்கள் ராமலிங்க ரெட்டி, எம்.கிருஷ்ணப்பா, எம்.எல்.ஏ என்.ஏ.ஹாரீஸ், சட்டமேலவை உறுப்பினர் டி.ஏ.சரவணா, மேயர் கங்காம்பிகே, முன்னாள் மேயர் சம்பத்ராஜ், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, அமமுக மாநிலச் செயலாளர் வா.புகழேந்தி, அதிமுக இணைச் செயலாளர் எஸ்.டி.குமார், நடிகை ராதிகா, கன்னட நடிகர் புனித்ராஜ்குமார், ஹட்டிகா கோல்டு குழுமத்தின் மேலாண் இயக்குநர் பொம்மனஹள்ளி பாபு உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
அவர்களும் விழாவிற்கு வருவதாக உறுதியளித்துள்ளனர். விழாவில் அரசியல், ஊடகம், தொழில்துறையில் சிறந்து விளங்கிவர்களுக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கெளரவிக்கப்படும். கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது. இதனை உணர்ந்துள்ள கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் கூட்டணி அரசு தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி, செயல்படுத்துவது உண்மைதான் என்றாலும், தமிழர்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் அளிப்பதில் அனைத்துகட்சிகளும்
பின்தங்கியுள்ளது. 
எதிர்காலத்தில் அனைத்துக் கட்சிகளிலும் தமிழர்களுக்கு முக்கியப் பதவிகளைப் பிடிப்பதில் வாய்ப்புத் தர வேண்டும். திருவள்ளுவர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழர்கள் அனைவரும் கட்சி பேதங்களைக் கடந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார். 
பேட்டியின்போது, மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கண்டரே, சிவாஜிநகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com